பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

X
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பாக பிளஸ் டூ பொதுத்தேர்வில் அரசு பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற பத்து மாணவர்கள் மற்றும் 10 மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர் இந்த நிகழ்ச்சிக்கு பேரவையின் தலைவர் பாலு தலைமை தாங்கினார் செங்குந்தர் மகாஜன சங்கத்தின் திருச்செங்கோடு பொறுப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார் இதேபோன்று பேசிய மற்ற பிரமுகர்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அதை அடையும் வழிகள் குறித்தும் எடுத்துக் கூறினர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த ஹரி நிவாஸ் என்ற மாணவனுக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற பவித்ரா என்ற மாணவிக்கும் பரிசுத்தொகை நபர் ஒருவருக்கு 10,000 வழங்கப்பட்டது இவர்களைத் தொடர்ந்து மதிப்பெண் பட்டியலில் 10 இடங்களை பிடித்த 20 மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன சமுதாயத்தில் ஏழ்மை நிலையில் உள்ள இரண்டு நபர்களை திருச்செங்கோடு செங்குந்தர் இளைஞர் பேரவை தத்தெடுத்து அவர்கள் கல்வி செலவை முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார்கள் இதன்படி ஆண்டுதோறும் எட்டு நபர்களுக்கு கல்வி செலவு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்ந்த நிர்வாகிகள் மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய அசைவு விருந்து வழங்கப்பட்டது
Next Story

