கோவையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தி!
ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தி, கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் ஆன்மிக சிறப்புடன் கொண்டாடப்பட்டது. சிவானந்தா காலனி பகுதியில், குழந்தைகள் கிருஷ்ணன் – ராதை வேடம் அணிந்து ஊர்வலமாகச் சென்று மகிழ்ந்தனர். வீடுகளில் பக்தர்கள் கிருஷ்ணர் சிலைகளை பூக்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தினர். விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜரங்க்தள் சார்பில், ரத்தினபுரியில் 13வது ஆண்டாக கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ரக்ஷா பந்தன் விழாக்கள் இணைந்து நடைபெற்றன. இதில் பரதநாட்டியம், ஆன்மிக பாடல்கள், பஜனை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்தன. கோவை மாவட்டம் முழுவதும் இருந்து பெருமளவில் பக்தர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
Next Story




