கிடா வெட்டி விருந்து வைத்த தவெகவினர்

மதுரையில் மாநாடு வெற்றியடைய தவெகவினர் கிடா வெட்டி விருந்து வைத்தனர்.
மதுரையில் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளதை தொடர்ந்து மாநாட்டிற்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மாநாட்டுக்கான வேலைகள் 90 சதவிகிதம் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று (ஆக.17)தமிழக வெற்றிக்கழக சார்பில் மாநாடு வெற்றி அடைய வலையங்குளம் கருப்பசாமி கோவிலில் கிடாவெட்டி விருந்து வைக்கப்பட்டது. விருந்தினை தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் துவக்கி வைத்தார்.தமிழக வெற்றிக்கழக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்லணை தலைமையில் கிடா விருந்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story