வைரல் வீடியோ

தேன் எடுக்க மரத்தில் ஏறிய இரண்டு கரடிகள் பொதுமக்களைக் கண்டவுடன் அவசர அவசரமாக மரத்தை விட்டு இறங்கும் காட்சிகள்......
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தேன் எடுக்க மரத்தில் ஏறிய இரண்டு கரடிகள் பொதுமக்களைக் கண்டவுடன் அவசர அவசரமாக மரத்தை விட்டு இறங்கும் காட்சிகள்...... நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாய் கொண்டு வருகிறது அதேபோல் உணவு தேடி குடியிருப்பு பகுதிகள் கடைவீதிகள் குப்பைத் தொட்டிகளை நோக்கி கரடிகள் வருவது வழக்கம் ஆகிவிட்டது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள கீழ் பாரதிநகர் பகுதியில் இன்று காலை இரண்டு கரடிகள் தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தில் தேன் எடுக்க மரத்தின் மீது ஏறியது அப்போது பொதுமக்களை கண்ட கரடிகள் அவசர அவசரமாக மரத்தை விட்டு இறங்கி ஓடியது இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Next Story