குமரி :மாற்று கட்சியினர் அதிமுகவில் இனைந்தனர்

X
குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 9 பேர் கொண்ட பூத் நிர்வாகிகள் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இன்னும் ஒரு மாதத்தில் விளவங்கோடு, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பூத் நிர்வாகிகள் அமைக்கும் பணி முடிவடைந்து விடும். அனைத்து பணிகளும் முடிவடைந்த உடன் கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் பூத் நிர்வாகிகள் பட்டியல் ஒப்படைக்கப்படும். என்று சின்னத்துரை பேசினார். தொடர்ந்து மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. மதிமுக பத்மநாபபுரம் நகர செயலாளர் ராஜா, நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை மாவட்ட இணை செயலாளர் அஜின், உறுப்பினர் ஸ்டாலின், அமமுக விலவூர் பேரூர் கிளை செயலாளர் ராமசாமி, திமுக விலவூர் பேரூர் கிளை செயலாளர் சுனில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் சுமார் 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை அதிமுக இணைத்து கொண்டனர். அதிமுகவில் இணைத்துக் கொண்ட அனைவருக்கும் மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை சால்வை அணிவித்து வரவேற்றார்.
Next Story

