தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரத்ததான முகாம்

X
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை இணைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாமை நடத்தினர்.இதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஷேக் பரீத் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் யாசர் அராபத் வரவேற்புரை ஆற்றினார். இதில் மாவட்டத் துணைத் தலைவர் அமீன்,த.மு.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நஜிபுர் ரகுமான்,மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர்கள் சுலைமான் சுகைல், ஜாகீர் உசேன்,ஊடகப்பிரிவு மண்டல செயலாளர் சாகுல் ஹமீது, இளைஞரணி செயலாளர் புரோஸ், முன்னாள் தொண்டர் அணி செயலாளர் அசன் நகர ஊடக பிரிவு செயலாளர் அபுதாகீர்,திண்டுக்கல் பகுதி பொறுப்பாளர்கள் ஜாபர் சாதீக்,யாசர் அராபத்,இமாம் உசேன்,ஜியாவுதீன், அப்துல் ரசீது,முஜிபுர் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

