குமாரப்பாளையம் கராத்தே வீரர்களின் சர்வதேச வெற்றி
Komarapalayam King 24x7 |17 Aug 2025 8:07 PM ISTகோவையில் நடந்த சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் குமாரப்பாளையம் கராத்தே வீரர்கள் சாதனை படைத்தனர்.
கோவையில் நடந்த சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் குமாரப்பாளையம் கராத்தே வீரர்கள் சாதனை படைத்தனர். கோவையில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் குமாரபாளையத்தை சேர்ந்த இன்பா உதயகுமார், 7 வயது பிரிவின் கீழ் பங்கேற்று, கட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கமும், குமிட்டே பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து 12 வயது பிரிவில் பங்கேற்ற குமாரபாளையத்தை சேர்ந்த ராம்குமார், கட்டா பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். குமாரப்பாளையத்தைச் சேர்ந்த இளம் வீரர்கள், சர்வதேச போட்டியில் சாதனை படைத்திருப்பது அப்பகுதி மக்களுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது. சாதனை மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள் ஷிஹான்ஷா கவுதம், முகேஷ், கிரி மற்றும் கவின் மற்றும் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
Next Story


