கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இன்று (ஆக.17) காலை காளியம்மன் திருக்கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் எஸ்.சதீஷ் தேசியக் கொடியை அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சிலம்பாட்டம், கோலாட்டம், மேளதாளம் என உற்சாகமாக ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.
Next Story

