தாராபுரத்தில் புகை மூட்டத்தால் கார் சரக்கு வேன் மோதி விபத்து

தாராபுரம்-கரூர் சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைக்கு தீவைப்பதால், ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக கார்-சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது.மற்றொரு விபத்தில் சாலை தடுப்பில் லாரி மோதியது.
தாராபுரம்-கரூர் சாலை உப்புத்துறைபாளையம் பகுதியில் சாலையோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைக்கு மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம், மாலை தீவைத்தனர். இதனால், 10 அடி தூரத்தில் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை மூட்டம் ஏற்பட்டது. இந்த புகைமூட்டம் காரணமாக அந்த, சாலையில் சென்று கொண்டிருந்த காரும்-சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புகைமூட்டம் காரணமாக அந்த பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இது குறித்து தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா ஜெயசிம் ராவ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த புகை மூட்டம் காரணமாக அந்த பாதையில், ஒரு மணிநேரம், போக்குவ ரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது. மேலும் நேற்று, காலையில் தாராபுரம் பஸ் நிலையம் அருகே திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி திடீரென பழுது ஏற்பட்டு, சாலையின் மையப் தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவச மாக லாரி ஓட்டுனர் உயிர் தப்பினார்.
Next Story