காவலர்களை பாராட்டிய திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட்

காவலர்களை பாராட்டிய திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட்
X
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 65 வழக்குகள் பதிவு
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட், உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி சட்ட விரோத செயல்களான கஞ்சா,தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, கள்ள சந்தையில் மது விற்பனை, அண்டை மாநில மது கடத்தல்,சட்ட விரோத மணல் கடத்தல்,லாட்டரி விற்பனை,சூதாட்டம்,வழிப்பறி, ரௌடிசம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வார இறுதி நாட்களில் (16.08.2025 - 17.08.2025) திருவாரூர் மாவட்டத்தில், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட - 63 நபர்கள் கைது செய்யப்பட்டு, 1368 மது பாட்டில்களை பறிமுதல் செய்தும்,தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்தும், ரூ.3000 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும்,அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனைக்கு வைத்திருந்த ஒருவர் கைது. சிறப்பாக செயல்பட்டு மேற்படி வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்து, வழக்கில் தொடர்புடைய பொருட்களை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட்,பாராட்டினார்.
Next Story