கர்ப்பிணிகள் அவதி

கர்ப்பிணிகள் அவதி
X
அவதி
கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு, கச்சிராயபாளையம் சாலையில் உள்ள பழைய மருத்துவமனை வளாகத்திலேயே இயங்கி வருகிறது. தமிழக அளவில் அதிக பிரசவங்கள் நடைபெறும் அரசு மருத்துவமனை பட்டியலில் கள்ளக்குறிச்சியும் இடம்பெற்றுள்ளது. இம்மருத்துவமனை வளாகத்தில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது. மருத்துவமனைக்கு சொந்த வாகனங்களில் வரும் கர்ப்பிணிகள் குண்டும் குழியுமான சாலையால் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
Next Story