பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
X
பாராட்டு
அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவம் படிக்க இடம் பிடித்த 7 மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சியில் பாராட்டு விழா நடந்தது.ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, ரோட்டரி சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகன் வரவேற்றார். மாநில அளவில் முதலிடமும் பிடித்த திருக்கோவிலுார் மாணவர் திருமூர்த்தி, மாநிலத்தில் 3ம் இடம் பிடித்த எஸ்.ஒகையூர் மாணவி மதுமிதா மற்றும் ஜெயஸ்ரீ, ஹரிசங்கர், பாக்கியராஜ், ரூபிகா, கோபிகா ஆகியோர்களுக்கு டாக்டர் சுரேஷ் பரிசு வழங்கி கவுரவித்தார்.
Next Story