சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் பள்ளி

X
வத்தலக்குண்டுவில் 1933ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மிகவும் பாரம்பரிய பள்ளி ஆகும். இந்த பள்ளி கடந்த சில ஆண்டுகளாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. சுமார் 2000 த்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்த நிலையில் தற்போது 350 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். வருடா வருடம் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருவதால் பாரம்பரியமிக்க பள்ளி விளம்பர திமுக ஆட்சியில் தன்னுடைய கல்வித்தரத்தை இழந்து வருகிறது.. மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறைகள் இன்றி மாணவர்கள் தவித்து வருகின்றனர். மேலும் பள்ளி வளாகங்களில் மதுப் பிரியர்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை உடைத்துச் செல்லும் அவலங்களும் ஏற்பட்டு வருகிறது.. இரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகிறது. பள்ளியின் முன்புற கேட்டுகள் 24 மணி நேரமும் திறந்தே காணப்படுவதால் சமூக விரோதிகள் எளிதாக பள்ளிக்குள் சென்று விடுகின்றனர். இதுகுறித்து பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பல முறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை... நேற்று இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடினர். இந்த அரசு பள்ளிக்கு விடிவுகாலம் பிறக்குமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Next Story

