உலா வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்

உலா வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்
X
பெரும்பாறை அருகே உலா வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்
கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் பள்ளத்துகால்வாய், மல்லிகைபாறை, கவுச்சிகொம்பு, பாச்சலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் ஒற்றை காட்டுயானை புகுந்து காபி தோட்டங்களில் அமைக்க ப்பட்டிருந்த முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது. இந்த நிலையில் பள்ளத்து கால்வாய் கிராமத்தில் உள்ள சாலைகளில் ஒற்றை யானை உலா வந்தது. இது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே அடர்ந்த வனப்பகுதிக்குள் காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை வேண்டும் எடுக்க என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story