செந்துறை குளக்கரை அருகே சூதாடிய கும்பல் கைது

செந்துறை குளக்கரை அருகே சூதாடிய கும்பல் கைது
X
செந்துறை குளக்கரை அருகே சூதாடிய கும்பல் கைது
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை, கோவிலூர், கொம்பேறிப்பட்டி, புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவில் திருவிழாக்கள் களை கட்டியது. இதையொட்டி மாந்தோப்பு மற்றும் தென்னந்தோப்புகளில் சூதாட்டம் நடைபெற்று வந்தது. அவ்வப்போது போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் இது தொடர்ந்தது. இந்த நிலையில் செங்குறிச்சி குளக்கரை அருகே உள்ள பகுதியில் செங்குறிச்சி மற்றும் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, அருண்குமார், நாகராஜ், மணிகண்டன், சின்ன ராஜா, முனியப்பன், ஆண்டி அழகன், ராஜ்குமார், ஆண்டிச்சாமி ஆகியோர் சூதாடியதில் தெரிய வந்தது. அப்பகுதியில் ரோந்து சென்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான தலைமை காவலர்கள் பொன்னர், பாலசுப்பிரமணி, ரவீந்திரன் உள்ளிட்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தார். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.1580 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story