டிராக்டர் மோதி முதியவர் கால் முறிவு

டிராக்டர் மோதி முதியவர் கால் முறிவு
X
நத்தம் குட்டூர் பிரிவு அருகே டிராக்டர் மோதி முதியவர் கால் முறிவு
நத்தம் அருகே உலுப்பகுடியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி விவசாயி. இவர் தனது பைக்கில் நத்தத்திற்கு காய்கறி மார்க்கெட்டிற்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். குட்டூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திரும்ப முயன்ற டிராக்டர் பைக் மீது மோதி வெள்ளைச்சாமியின் காலில் டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த வெள்ளைச்சாமிக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story