புதிய வழித்தட பேருந்துகளை துவக்கி வைத்த திமுக மாவட்ட செயலாளர்.

மதுரை திருமங்கலம் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்துகளை திமுக மாவட்ட செயலாளர் தொடங்கி வைத்தார்.
மதுரை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக திமுக மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் முயற்சியால் திருமங்கலம் அருகே மீனாட்சிபட்டி கிராமத்திலிருந்து வடபழஞ்சி- காமராஜர் பல்கலைக்கழகம் - நாகமலைபுதுக்கோட்டை, அச்சம்பத்து வழியாக பெரியார் பேருந்து நிலையம் வரை புதிய அரசு நகர் பேருந்து சேவையை நேற்று (ஆக.17) சேடப்பட்டி மணிமாறன் இனிப்பு வழங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story