தமிழ் சங்கத்தில் கவிதை நுால் வெளியீடு

தமிழ் சங்கத்தில் கவிதை நுால் வெளியீடு
X
வெளியீடு
கல்லை தமிழ் சங்கம் சார்பில் கவிதை நுால் வெளியீட்டு விழா நடந்தது. விழாவிற்கு சங்க தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். செயலாளர் சக்திவேல், தாமோதரன், பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் மதிவாணன் வரவேற்றார். விழாவில் மாணவர்கள் தமிழமுதன், தமிழினி ஆகியோர் திருக்குறள் ஒப்பிவித்தனர்.சங்கை தமிழ் சங்க செயலாளர் சாதிக்பாஷா, பகுத்தறிவு இலக்கிய மன்ற தலைவர் ஜெயராமன், திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி ஆகியோர் திருக்குறள் புகழ் அதிகாரம், அவ்வையார் பாடல், உடலோடு பேசுவோம் என்ற தலைப்பில் பேசினர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை தமயந்தி எழுதிய, சருகுகள் சிறகுகளாய் தலைப்பிலான கவிதை நுாலினை தமிழ் கவிஞர் மன்ற தலைவர் ஆராவமுதன் வெளியிட்டார். டாக்டர் திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார்.
Next Story