தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

X
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், ஏஐசிசிடியு தலைவர்கள் வழக்கறிஞர்கள் மீது அராஜகமாகத் தாக்குல் நடத்தி கைது செய்த தமிழ்நாடு காவல் துறையைக் கண்டித்தும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் தனியார்மயத்தை கண்டித்தும் தூத்துக்குடியில் ஏஐசிசிடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் சகாயம் தலைமை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மின்னல் அம்ஜத், மாவட்டத் தலைவர் சிவராமன், மாவட்ட செயலாளர் மு. முருகன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி பாத்திமாபாபு, தமிழர் விடுதலைக் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சேமா சந்தனராஜ், தமிழக வெற்றி கழகம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ், AICCTU மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரி, கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் தங்கையா யூஜின் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
Next Story

