மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க பொதுக் குழு கூட்டம்

X
தூத்துக்குடியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் மாநகர கிளை 36வது பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. மாநகர தலைவர் இரா.மாடசாமி தலைமை வகித்தார். செயலாளர் எம்.சேவியர் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் துணைத் தலைவர் மேரி, செயற்குழு உறுப்பினர் ராஜமணி, டிஎஸ்பி (ஓய்வு) ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு அரசு அலுவலர் ஆனந்தன், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன், HWP ஓய்வு பெற்ற அலுவலர் ஆறுமுக நயினார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் செயற்குழு உறுப்பினர் வள்ளி நன்றி கூறினார் கூட்ட ஏற்பாடுகளை சங்க அலுவலர் சங்கீதா ரமேஷ் செய்திருந்தார்கள்.
Next Story

