சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் புதியதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் 15வது நிதி குழு மாநிலத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பேருராட்சி செயல் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். வார்டு கவுன்சிலர்கள் மோகன் ஜெயந்தி மோகன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உட்பட பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்
Next Story