பாலாற்று படுகையில் மணல் கொள்ளை! மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட அம்பலூர் பாலாற்று கரையோர படுக்கையில் பட்டபகலில் மூட்டை மூட்டையாக மணல் கொள்ளையடிக்கப்படு வருகின்றது தடுக்க கோரி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியில் உள்ள பாலாற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பாலாற்று மணல்கள் குவியல்களாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பட்டபகலில் மூட்டைமூட்டையாக இளைஞர்கள் சிலர் மணல் கடத்தலில் ஈடுப்பட்டு வருகின்றனர், மேலும் பட்டபகலில் நடைப்பெறும் இந்த மணல்கொள்ளையை காவல்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கண்டும்காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர் இதுகுறித்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலாறு படுக்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

