கோவை: ஆலாந்துறையில் வெள்ளியங்கிரி கோவில் அறங்காவலர் குழு பதவியேற்பு !

X
கோவை ஆலாந்துறை அருகே உள்ள தென் கைலாயம் எனப் போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. குழுத் தலைவராக சிவ கணேஷ் நியமிக்கப் பட்டார். உறுப்பினர்களாக தர்மலிங்கம், சுதா, வெள்ளியங்கிரி, கவிதாராஜா, வினோத்குமார் ஆகியோர் பதவியேற்றனர். கோவில் மலை அடிவாரத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ஒன்றிய செயலாளர் சாமிபையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

