சொந்த நிதியில் மக்களுக்கு குடிநீர் வழங்கிய எம்எல்ஏ

சொந்த நிதியில்  மக்களுக்கு குடிநீர் வழங்கிய எம்எல்ஏ
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட, கோவளம் ஊராட்சி, தெற்கு குண்டல் பகுதி பொதுமக்கள் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் குடிநீர் குழாய் அமைத்து குடிதண்ணீர் வசதி செய்து தர கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கையினை ஏற்று தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 60 ஆயிரம் செலவில் குடிநீர் வசதியினை செய்து கொடுத்தார். இதனை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று தெற்கு குண்டல் நாராயணசுவாமி கோவில் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு குண்டல் ஊர் தலைவர் ஐயப்பன், செயலாளர் முத்துகுமார், கவுன்சிலர் செல்வி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தாமரை தினேஷ், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் அக்சயாகண்ணன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக பொருளாளர் தங்கவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாலமுருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story