கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு !

கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு !
X
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிணத்துக்கடவுக்கு வருகை தந்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று மாலை கிணத்துக்கடவுக்கு வருகை தந்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அவர், அங்கு பணியாற்றும் மருத்துவர்களிடம் மொத்தம் எத்தனை டாக்டர்கள் பணியில் உள்ளனர், தினசரி எத்தனை பேர் சிகிச்சைக்காக வருகின்றனர், எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன, தற்போது எத்தனை நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், மருந்து-மாத்திரைகள் போதுமானவையாக உள்ளனவா என விரிவாக கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளை நேரடியாக சந்தித்து நலம் விசாரித்த அவர், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது மருத்துவர்கள், நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்ய தேவையான கருவிகள் அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆய்வுக்குப் பின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதாரத்துணை இயக்குநர் சுமதி, கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் அன்வர் அலி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
Next Story