கோவையில் கூலி படம்: குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு அனுமதி மறுப்பு – பரபரப்பு

A சான்றிதழ் காரணமாக குழந்தைகளுக்கு அனுமதி இல்லை – கோவையில் வாக்குவாதம்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு திரையரங்குகளில் அனுமதி இல்லை. இந்நிலையில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி. திரையரங்கில், குழந்தைகளுடன் வந்த சிலர் டிக்கெட் எடுத்திருந்தாலும் அனுமதி மறுக்கப்பட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்யும் போதே வயது வரம்பு குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தாலும், சில திரையரங்குகளில் விதிகள் பின்பற்றப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அனுமதி மறுக்கும் நிலையில், பிற இடங்களில் குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதால் கேள்விகள் எழுந்தன. மேலும், பணம் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
Next Story