கோவை அருகே மான் மீது தெரு நாய்கள் தாக்குதல் : நான் பரிதாபமாக உயிரிழப்பு

X
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள எலச்சிபாளையம் பகுதியில் உள்ள கலரான் தோட்டத்துக்குள் வனப்பகுதியிலிருந்து வழி தவறி வந்த மான் புகுந்தது. அப்போது அங்கு இருந்த தெரு நாய்கள் கூட்டமாக மானை சுற்றி வளைத்து கடித்தன. இதில் சிக்கித் தவித்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த காட்சி அப்பகுதி விவசாயியால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்பகுதி மக்கள், அடிக்கடி வனவிலங்குகள் இப்பகுதிக்குள் புகுவதாகவும், தெரு நாய்கள் அவற்றை வேட்டையாடி கொல்வது வழக்கமாகிவிட்டதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் குழந்தைகளுக்கும் அபாயம் ஏற்படும் நிலையில், வனத்துறை மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Next Story

