பாளையங்கோட்டை தொகுதி நிர்வாகிகள் கூட்டம்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி நிர்வாகிகள் கூட்டம் மேலப்பாளையத்தில் இன்று தொகுதி தலைவர் சலீம் தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் கனி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மேலப்பாளையம் முழுவதும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

