ஊத்தங்கரை: குளிக்க சென்ற இரண்டு மாணவிகள் உயிரிழப்பு.

ஊத்தங்கரை: குளிக்க சென்ற இரண்டு மாணவிகள் உயிரிழப்பு.
X
ஊத்தங்கரை: குளிக்க சென்ற இரண்டு மாணவிகள் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கீழ்மத்தூரை சேர்ந்தவர் பழனி இவரது வீட்டுக்கு ஆடி கிருத்திகை திருவிழாவில் பங்கேற்கசேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி மற்றும் உறவினர்கள் குடும்பத்துடன் வந்தனர். நேற்று காலை நீலாஸ்ரீ, சாரு நேத்ரா மற்றும் அவர்களது தோழிகள் 5 பேரும் குளிப்பதற்காக கீழ்மத்தூர் அருகே செட்டியார் அருகே உள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நீலாஸ்ரீ, சாரு நேத்ரா இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்ததும் உடன் வந்த தோழிகள் உதவி கேட்டு கூச்சல் இட்டனர். இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் ஏரிக்குள் இறங்கி 2 மாணவிகளையும் தேடினர். சிறிது நேரத்தில் ஏரிக்குள் மூழ்கிய நீலாஸ்ரீ மற்றும் சாரு நேத்ரா இருவரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story