நெய்யாறு இடதுகரை கால்வாயில் பக்கச்சுவர் பணி

X
குமரி மாவட்டம் , மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட, மரியகிரி - முப்பந்தி கோணம் பகுதியில் கடந்த 12-11-2021 - அன்று ஏற்பட்ட கனமழையால் நெய்யாறு இடதுகரை கால்வாயில் பக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கால்வாய்கரை வழியாக செல்லும் முப்பந்தி கோணம் – ஏலூர்காடு சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டு, கால்வாயின் கரையில் உள்ள வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த கால்வாய்கரை வழியாக பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் முடியாத நிலையில் அவதிப்பட்டனர். இடிந்து விழுந்த பக்க சுவரை மாற்றி புதிதாக பக்கசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் புதிதாக பக்கசுவர் அமைக்க ரூ. 80 - லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்கச்சுவர் அமைக்கும் பணியினை இன்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், மெதுகும்மல் ஊராட்சி, சூரியக்கோடு கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷாஜி, நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

