தரிசு நிலத்திற்கு வேளாண்துறை சார்பில் கிணறு அமைக்க அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ

X
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் புத்திரன் கோட்டை ஊராட்சியில் 13 ஏக்கர் தரிசு நிலம் தண்ணீர் பாசன வசதி இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் நிர்மல் குமார் செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு.பாபுவிடம் மனு அளித்தார். இந்த மனுவினை வேளாண்மை துறைக்கு பரிந்துரை செய்ததன் பேரில் அந்த கிராமத்தில் புத்திரன் கோட்டை தரிசு நில தொகுப்பு விவசாயிகள் சங்கம் தொடங்கப்பட்டு அங்க கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 19 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு கிணறு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நிர்மல் குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஏழுமலை,வேளாண்மை துறை இணை இயக்குனர் பிரேம சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா, வேளாண்மை துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சிற்றரசு அனைவரையும் வரவேற்றார். இதில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு.பாபு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி கிணறு தோண்டும் பணியை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு துணை பெருந்தலைவர் பிரேமா சங்கர், நிர்வாகிகள் குமுதம் மதுரை, ராஜசேகர், வடிவேல், விநாயகம், மலர் சங்கர், பூலோகம், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மணி, துணைத் தலைவர் நித்தியானந்தம், ஊராட்சி செயலர் முரளி, உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story

