காங்கேயம் அருகே விநாயகர் சிலையை அப்புறப்படுத்திய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பேருந்து நிலையத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெருமாள்மலையில் விநாயகர் சிலை வைத்திருந்ததை அப்புறப்படுத்தியதை கண்டித்து இந்துமுன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எடுத்துச் சென்ற விநாயகர் சிலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று திரட்டி கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்
காங்கேயம் சிவன்மலை அடுத்துள்ள பெருமாள்மலை பகுதியில் சிலர், நெடுஞ்சாலையோரம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் முன்னனுமதி இன்றி விநாயகர் சிலையை ஒரு தரப்பினர் ரெடிமேட் கட்டடம் கட்டி, அதில் விநாயகர் சிலையை அமைத்து கடந்த 31ம் தேதி வருவாய் துறையிறருக்கு சொந்தமான இடம் ரீ.சா.எண் 787ல் வைத்தனர். இதனை எதிர்த்து மற்றொரு தரப்பினர் அவ்விடத்தில் கோவில் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கேயம் தாசில்தார் மோகனன், காங்கேயம் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், காங்கேயம் ஆர்.ஐ விதுர்வேந்தன், சிவன்மலை விஏஓ சுகன்யா உள்ளிட்டோர் 4 மணிநேரம் பேச்சு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகள் கிரேன் மூலம் பாதுகாப்பாக எடுத்து மாற்று இடத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில் அரசு இடத்தில் அனுமதியின்றி சிலைகள் ஏதும் வைக்ககூடாது, இதனால் பல்வேறு சட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதை அடுத்து கடந்த 05ம் தேதி தாராபுரம் கோட்டாச்சியர் பெலிக்ஸ்ராஜா, காங்கேயம் தாசில்தார் மேகனன் உள்ளிட்ட வருவாய்துறையினர் முன்னிலையில், காவல்துறை உதவியுடன் கிரேன் மூலம் சிலைகள் பாதுகப்பாக எடுக்கப்பட்டு, பின் லாரியின் மூலம் காங்கேயம் தாசில்தார் அலுவகத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு சிலையை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதை கண்டித்து இன்று காங்கேயம் பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றி இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் பேசுகையில் ஒரு வெங்காயமும் இந்த தொகுதிக்கு செய்து கொடுக்காத இந்த சாமிநாதன் அமைச்சர் என்ன செய்தார் என கேள்வி எழுப்பினர். மேலும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுத்துள்ளாரா? எனவும் மேலும் கோவில் நிலத்தில் கோவில்தான் வேண்டும் என பொதுமக்கள் கேட்கின்றனர். இதே சிவன்மலை கோவில் நிலத்தை எத்தனை பேர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். நீங்கள் எல்லாம் நேர்மையான ஆட்களாக இருந்தால் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை தனியார் பால் நிறுவனம் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி தொழில் செய்து வருவதை தடுக்க முடியுமா? இதை எல்லாம் கேட்டால் எங்கள் மீது பொய் வழக்கு போடுவது என தெரிவித்தார். மேலும் எடுத்து செல்லப்பட்ட சிலையை ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் பொதுமக்கள் ஒன்று திரட்டி கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார், திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் கந்தசாமி, மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் பாஸ்கர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், பாஜக நகர தலைவர் சிவப்பிரகாஷ், ஒன்றிய தலைவர் செந்தில்குமார், இந்து முன்னணி ஒன்றிய பொதுச்செயலாளர் நாகராஜ், நகர பொதுச்செயலாளர் கௌரிசங்கர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

