அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் குடிபோதையில் ரகளை

X
குமரி மாவட்டம் குழித்துறை அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 2:30 மணிக்கு போதையில் நபர் ஒருவர் தலை மற்றும் கையில் அடிபட்ட காயத்ததுடன் சிகிச்சைக்கு வந்து உள்ளார். போதையில் சிகிச்சைக்கு வந்த நபர் டாக்டர் மற்றும் நர்ஸ்களை மற்றும் மருத்துவமனை ஊழியர்களை ஆபாசமாக தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டார். ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசாரும் மருத்துவமனை ஊழியர்கள் அவரோடு போராடி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் அந்த நபர் மீது மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஐந்து பேர் கையெழுத்துட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் போதை இறங்கியவுடன் விபரீதத்தை உணர்ந்த ஆசாமி அதிகாலையில் தலைமறைவாகிவிட்டார். அவர் போதையில் இருந்ததால் சரியான பெயரோ முகவரியோ தெரியவில்லை இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

