கூமாப்பட்டி ஊருக்குள் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடிக்க கோரிக்கை...*

X
விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி ஊருக்குள் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடிக்க கோரிக்கை... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக 2 குரங்குகள் சுற்றி வருகின்றன. இந்த குரங்குகள் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியும், உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பொதுமக்கள் நடமாட முடியாதவாறு குரங்குகள் அச்சுறுத்தி வருவதாகவும் உடனே ஊருக்குள் சுற்றித் திரியும் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து காட்டுப் பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

