ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

X
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இன்று(18.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் மகளிர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார். அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சிவந்திபுரம் ஆத்து மேடு தெருவில் மகளிர் சுய உதவி குழுக்களில் உறுப்பினர் சேர்க்கையினை நேரில சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சிவந்திபுரம் ஆத்துமேடு தெவில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் பால்கோவா தயாரித்து விற்பனை செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் கலந்துரையாடினார். விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மாத்தி நாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தாமரை மகளிர் சுய உதவி குழுவினரின் மசாலா தயாரிக்கும் இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் தரம், உற்பத்தி முறை குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாத்தி நாயக்கன் பட்டியில் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் சுயதொழிலுக்கான கடன் உதவி பெற்று கடை நடத்தி வருவதனை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பயன் பெறும் சுய உதவிக்குழுக்களில் நபர்களின் எண்ணிக்கை குறித்தும், இதன் மூலம் சுயஉதவி குழுக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களிடையே செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், கடனுதவிகள், மானியங்கள், பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அலுவலகத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மின் உற்பத்தி கழகத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சத்திரெட்டியாபட்டி ஊராட்சியில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் 'தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடு, பயன்கள், தாயுமானவர் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் நிலைப்பாடு மற்றும் அவர்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
Next Story

