விருதுநகர் மாவட்டத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாவட்டமாக முன்னேற்றமடைய செய்ய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னெடுத்த முக்கிய பணி...

விருதுநகர் மாவட்டத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாவட்டமாக முன்னேற்றமடைய செய்ய  முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னெடுத்த முக்கிய பணி...
X
விருதுநகர் மாவட்டத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாவட்டமாக முன்னேற்றமடைய செய்ய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னெடுத்த முக்கிய பணி... மாணவ, மாணவியர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்ற நிலைமையை உருவாக்க வேண்டும் எனவும் உறுதி.....
விருதுநகர் மாவட்டத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாவட்டமாக முன்னேற்றமடைய செய்ய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னெடுத்த முக்கிய பணி... மாணவ, மாணவியர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்ற நிலைமையை உருவாக்க வேண்டும் எனவும் உறுதி..... சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களின் பகுதிகளில் 10,11 மற்றும் 12 -ம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற "வெற்றி நமதே" என்ற தலைப்பிலான வினாடி- வினா தொகுப்புகளடங்கிய கல்வி வழிகாட்டி கையேடு இலவசமாக வழங்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டுள்ளார். கல்வியில் சிறந்து விளங்கி மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தை மீண்டும் கல்வியில் முன்னேற்றமடைய செய்யும் நோக்கிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவிகள் எளிதில் பொதுத்தேர்வில் வெற்றி பெற தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கும் நோக்கிலும் கையேடு வழங்கி வருகிறார். முதல் நாளான இன்று சிவகாசி பள்ளப்பட்டி, நாரணாபுரம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு இலவச கையேடு வழங்கினார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் கையேடு வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மாணவ மாணவியர் மத்தியில் சிறப்புரையாற்றினார்...அப்போது கல்வி ஒன்று தான் அழியாத செல்வம். ஜாதி, மதங்களைக் கடந்து, இனவாதம் மதவாதம் பிரிவினைவாதம் ஆகியவைகள் ஒழிய வேண்டுமென்றால் அனைவரும் கல்வி கற்க வேண்டும். படிப்பு ஒன்று தான் சகோதரத்தன்மை சகிப்புத்தன்மை போன்றவற்றை உருவாக்கும். கல்வி மூலமாக வேற்றுமையில்லாத ஒரு வரலாற்றை சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அமைக்க வேண்டும். உழைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கல்வியும் முக்கியம். படித்தவர்கள் எந்த நேரத்திலும் எந்த வேலை செய்தாவது எப்படியும் முன்னேறிக் கொள்வார்கள். கல்வியிலே சிவகாசி சட்டமன்றத் தொகுதி சிறந்து விளங்கி அறிவாளிகளை உருவாக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்ற நிலைமையை உருவாக்க வேண்டும். கல்வி மேம்படுவதற்க்காக எடுத்துள்ள இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது ஆங்கிலவழி மற்றும் தமிழ்வழி கல்வி கற்கும் மாணவ மாணவியருக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் கல்வி வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படவுள்ள நிலையில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 15- ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கு முன்பாக கல்வி வழிகாட்டி புத்தகம் வழங்க வேண்டுமென்பதால் மற்ற பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மாணவ, மாணவியருக்கான கல்வி வழிகாட்டி புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறோம். இதன் மூலமாக நடப்பாண்டு நடைபெறவுள்ள அரசு பொதுத் தேர்வுகளில் சிவகாசி சட்டமன்ற தொகுதி முதலிடம் பெற்றது என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும். என்றார்.
Next Story