கடிதம் எழுதி வைத்துவிட்டு கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மின்வாரிய ஊழியரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்த

கடிதம் எழுதி வைத்துவிட்டு கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மின்வாரிய ஊழியரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்த
X
கடிதம் எழுதி வைத்துவிட்டு கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மின்வாரிய ஊழியரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சிவகாசி அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மின்வாரிய ஊழியரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்... சிவகாசி அருகே செங்கமலப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த் 38. மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் இவர் தன்னுடன் பணியாற்றி வரும் மின் வாரிய ஒப்பந்த ஊழியரான உதயகுமார் என்பவருடன் நீண்ட நாட்களாக நண்பராக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கலந்த சில மாதங்களுக்கு முன்பாக 50 லட்சம் ரூபாய் தயார் செய்து தருமாறும் அப்பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்து இரட்டிப்பாக வழங்குவதாக உதயகுமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவரது ஆசை வார்த்தையை நம்பிய ஆனந்த் தனது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மற்றும் பைனான்ஸ் நிறுவனம் என 9 இடங்களில் கடன் பெற்று சுமார் 30 லட்சம் ரூபாய் வரை உதயகுமாரிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உதயகுமார் இரட்டிப்பாக பணத்தையும் தராமலும், கொடுத்த பணத்தையும் தராமல் மோசடி செய்துள்ளார். அதே நேரம் தான் பல இடங்களில் பெற்ற கடனை கேட்டு அவர்கள் நெருக்கடி செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்த், தான் யார் யாரிடமெல்லாம் கடன் வாங்கி உதயகுமாருக்கு கொடுத்துள்ளேன் என்கின்ற விவரங்கள் அடங்கிய 8 பக்க கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடிதத்துடன் உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் சிவகாசி சாத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி பாஸ்கரன் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
Next Story