நீலகிரி மாவட்டத்தில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டம்... நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை ஒப்பந்ததாரர்கள் வழங்குவதில்லை என கூறி நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் என்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் காத்திருக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ECl, PF மருத்துவ காப்பீடு முறையாக ஒப்பந்ததாரர்கள் வழங்குவதில்லை எனவும், இதனை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் தூய்மை பணியாளர்களின் பிரச்சனையில் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story



