மஞ்சனகொரை பகுதியில் உள்ள மின் மயானத்தை சீரமைத்து தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியிடம் மனு ....

நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு
நீலகிரி மஞ்சனகொரை பகுதியில் உள்ள மின் மயானத்தை சீரமைத்து தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியிடம் மனு ............. நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் உதகை அடுத்த மஞ்சனகொரை பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இங்கு உள்ள மின் மயானமானது மிகவும் அசுத்தமாகவும் பராமரிப்பின்றி உள்ளதாகவும் மேலும் மின்மயானம் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கூறி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Next Story