உதகையில் தொடர் மழையின் காரணமாக வண்டிச்சோலை குடியிருப்பு பகுதியில் விழுந்த ராட்சத மரம்..

X
நீலகிரி உதகையில் தொடர் மழையின் காரணமாக வண்டிச்சோலை குடியிருப்பு பகுதியில் விழுந்த ராட்சத மரம்... மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்... நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், தேவாலா, பந்தலூர், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது. மேலும் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழையும், அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் உதகையில் சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வரும் நிலையில், உதகை வண்டிச்சோலை குடியிருப்பு பகுதியில் பழமை வாய்ந்த ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து உதகையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story

