செங்கல்பட்டில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்து அரசு மருத்துவர் உயிரிழப்பு

X
செங்கல்பட்டில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்து அரசு மருத்துவர் உயிரிழப்பு. செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அப்பொழுது திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி அரசு பேருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட ராட்டின கிணறு பகுதியில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்து விபத்துக்குள்ளானது. குறிப்பாக அரசு பேருந்து ராட்டின கிணறு ரயில்வே மேம்பாலத்தை ஏறி இறங்கிய நிலையில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பட்ட இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் மணி குமார் 46 உயிரிழப்பு மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் உடனடியாக அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காலையிலேயே நடைபெற்ற இந்த விபத்தின் காரணமாக மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திண்டிவனம், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், உள்ளிட்ட பகுதியிலிருந்து செங்கல்பட்டு நோக்கி வரும் வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
Next Story

