விபத்தில் உயிரிழந்த மருத்துவருக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

X
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இராட்டினகிணறு மேம்பாலத்தின் அருகே ஏற்பட்ட விபத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் மணிக்குமார் உயிரிழந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்கள், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, இ.ஆ.ப., செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன், இ.ஆ.ப., மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. பிரியா பசுபதி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், நகர நிர்வாகிகள், உடனிருந்தனர்.
Next Story

