மாற்றுத் திறனாளிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வலியுறுத்தி எம்.பி,யிடம் கோரிக்கை மனு

மாற்றுத் திறனாளிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வலியுறுத்தி எம்.பி,யிடம் கோரிக்கை மனு
X
கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைகளை பாதுகாக்கவும், நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர உதவித் தொகையை ஒன்றிய அரசு குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.  2016 ஆம் ஆண்டு ஐ.நா சபையில் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட உரிமைகள் சட்டத்தை ஒப்புக் கொண்டவாறு, இந்திய அரசு அமுல்படுத்திட வேண்டும். 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்திட வேண்டும்.  மேலும், அதற்கான கூலியை நாள் ஒன்றுக்கு ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுடைய பல்வேறு கோரிக்கைகளுக்காக, பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திட வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டக்குழு சார்பில், ஞாயிறு ன்று தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலியை, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் கே.மோகன், மாநகரச் செயலாளர் சி.ராஜன், ஆயிராசு ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.
Next Story