தஞ்சாவூரில் தமுஎகச மாநில மாநாடு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம்

X
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டில், 16 ஆவது மாநில மாநாடு, எதிர்வரும், டிசம்பர் 4,5,6,7 ஆகிய தேதிகளில் தஞ்சை தமிழரசி மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், கலை இலக்கிய ஆளுமைகள், திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட ஏறக்குறைய ஆயிரம் பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம், தஞ்சையில் ஞாயிறு மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமுஎகச மாநில துணைப்பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ப.சத்தியநாதன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் கவிஞர் நீலா, மாநில துணைப்பொதுச்செயலாளர் கவிஞர் வெண்புறா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், மேனாள் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவர் கவிஞர் முத்துநிலவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா நிறைவுரையாற்றினார். மாநாடு அனைத்து விதத்திலும் சிறப்பாக நடத்திட 200 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. மேனாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முதன்மை ஆலோசகராகவும், தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மாநில மாநாட்டு வரவேற்புக்குழு தலைவராகவும், வரவேற்புக்குழு செயலாளராக கவிஞர் களப்பிரன், வரவேற்புக்குழு பொருளாளராக ப.சத்தியநாதன் மற்றும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கலை இலக்கிய ஆளுமைகள், செயற்பாட்டாளர்கள், பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளின் நிர்வாகிகள், ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தஞ்சை மாவட்ட தமுஎகச அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை உள்ளடக்கிய இருநூறு பேர் கொண்ட வரவேற்புக்குழுவை மாவட்ட துணைத் தலைவர் இரா. விஜயகுமார் முன்மொழிய,, மாவட்டப் பொருளாளர் அசோக்குமார் வழிமொழிய கூட்டத்தினரின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் இருந்து இருநூறு பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி வாழ்த்திப் பேசினார். தமுஎகச மாவட்டத் தலைவர் முருக.சரவணன் நன்றி கூறினார்.
Next Story

