கோவை நெடுஞ்சாலையில் வழிப்பறி: மூவருக்கு குண்டர் சட்டம் !

கோவை நெடுஞ்சாலையில் வழிப்பறி: மூவருக்கு குண்டர் சட்டம் !
X
கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த ஜூலை 12-ம் தேதி, கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பாலம் பகுதியில், ஜெயன் (50) என்ற நகை ஏலம் தொழிலதிபர் ரூ.30 லட்சம் பணத்துடன் கேரளா நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கேரளாவைச் சேர்ந்த மனீஷ் (22), விஷ்ணு (31), ஜோசப் (27) ஆகியோர் நான்கு சக்கர வாகனத்தில் வந்து அவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்தனர். இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், குற்றவாளிகள் மீதான நடவடிக்கையாக குண்டர் தடுப்பு சட்டம் அமல்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட, மனீஷ், விஷ்ணு, ஜோசப் ஆகிய மூவர் மீதும் நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.
Next Story