தாயின் ஆண் நண்பர் தாக்குதல் : குழந்தைகள் ஆட்சியரிடம் புகார் !

X
கோவை குனியமுத்தூர் இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிமாலா, தனது கணவர் பிரகாஷை பிரிந்து, கௌதம் என்ற ஆண் நண்பருடன் பழகி வருகிறார். அடிக்கடி வீட்டிற்கு வந்த கௌதம், மணிமாலாவின் 17 வயது மற்றும் 12 வயது மகன்களை தாய் முன்னிலையிலேயே அடித்து துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், மணிமாலாவையும், அவரது மகன்களையும் தாக்கியதில் மூத்த மகன் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவன் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதுகாப்பு வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் 17 வயது சிறுவன் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம், வாழ்க்கையில் வழி தவறிய தாய் – வலியில் தவிக்கும் குழந்தைகள் என்ற சோகநிலையை வெளிப்படுத்தி, கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

