சங்கரன்கோவில் அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

சங்கரன்கோவில் அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை
X
கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் சின்ன கோவிலாங்குளம் காவல் சரகம் கல்லத்திகுளம் பகுதியைச் சோ்ந்த கணபதிசாமி மனைவி முத்துலட்சுமி (34). கணபதிசாமிக்கும் அவரது தம்பி விஜயகுமாா் என்பவருக்கும் சொத்துப் பிரச்னை இருந்ததாம். இந்நிலையில் 3.11.2015ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், அங்குள்ள நூலகம் முன் நின்றிருந்த கணபதிசாமியை, விஜயகுமாருக்கு ஆதரவாக அதே பகுதியைச் சோ்ந்த அவரது மைத்துனரான தொழிலாளி மாரிப்பாண்டி என்பவா் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பினாராம். சின்ன கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து மாரிப்பாண்டியை கைது செய்தனா். தென்காசி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி பி. ராஜவேலு விசாரித்து, மாரிப்பாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் குட்டி என்ற மருதப்பன் ஆஜரானாா்.
Next Story