பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
X
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவரது பிறந்தநாளை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் திண்டுக்கல்லில் செல்லாண்டியம்மன் கோவில் தெரு பகுதியில் சமூக நல்லிணக்க பேரவை நகரச் செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில், ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர். இதை அடுத்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சமூக நல்லிணக்க பேரவை நகர அமைப்பாளர் அக்பர் அலி முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் பாவா கலந்து கொண்டு பரிசுப் பொருட்களை வழங்கினார்.
Next Story