முதியவருக்கு செவித்திறன் கருவி: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

முதியவருக்கு செவித்திறன் கருவி: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
X
தூத்துக்குடியில் முதியவருக்கு செவித்திறன் கருவியை அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 6வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள சந்தனராஜ், என்பவர் செவித்திறன் குறைபாடு இருப்பதால் தனக்கு செவித்திறன் கருவி வழங்க வேண்டும் கோரிக்கை மனு அளித்திருந்தார். இம்மனு அமைச்சரின் கவனத்திற்கு சென்றதின் அடிப்படையில் நேரில் விவரங்களை கேட்டறிந்த போது சந்தனராஜ் கடந்த காலத்தில் திமுக மாவட்ட செயலாளராக என் பெரியசாமி இருந்த காலத்தில் இது போன்ற கருவி எனக்கு வாங்கி கொடுத்தார்கள். அது வருடங்கள் பல கடந்து விட்டதால் செயல் இழந்து விட்டது. என்று கூறியதின் பெயரில் அதே போல் செவித்திறன் கருவியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் சந்தனராஜ்க்கு தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர் ஜெயசீலி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட் உடனிருந்தனர்.
Next Story