விபத்தில் உயிரிழந்த மருத்துவருக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

X
செங்கல்பட்டு ராட்டிணகிணறு பகுதியில் மேம்பாலம் அருகே அரசு மருத்துவமனையில் பணிக்கு செல்வதற்காக குழந்தைகள் நல மருத்துவா்கள் மணிகுமாா், பிரவீண்குமாா் நடந்து சென்றனா். அப்போது அரசு பேருந்து, தனியாா் பேருந்துகள் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் போது ஒருவருக்கொருவா் முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கரவாகனத்தில் மோதி, பின்னா் சாலை தடுப்புகள் மீது மோதி பின்னா் இரண்டு மருத்துவா்கள் மீதும் மோதியதில் மருத்துவா் மணிகுமாா் உயிரிழந்தாா்.மற்றொரு மருத்துவா் பிரவீண் குமாா் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது குறித்து தகவல் அறிந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று மருத்துவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Next Story

